இலங்கை அதிபர் கோட்டாபயவால் உலக சாதனை படைத்த விமானம்!
மாலைதீவில் இருந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமான உலக சாதனை படைத்துள்ளது. அதாவது உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனையை அந்த விமானம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இது இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உலகளவிலான ஆர்வத்தை கோடிட்டு காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Flightradar24.com என்ற இணையத்தள தரவுகளின்படி சவுதி அரேபியாவில் விமானம் மாலைதீவு தலைநகர் மாலேவில் இருந்து ஜி.எம்.டி நேரடிப்படி இன்று காலை 7.43 அளவில் புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் புறப்பட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இணைய பயனர்களால் விமானம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக கூறப்ப்படுகின்றது.
இது ஐரோப்பா வானில் பறக்கும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை கண்காணிக்கும் நபர்களை விட மூன்று மடங்கு அதிகம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதேசமயம் சௌதி அரேபியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தை ஏராளமானோர் தேடியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை அதிகமானோரினால் கண்காணிக்கப்பட்ட விமானமாக (most-tracked flight) இது மாறியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலகம் முழுவதும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புளூம்பேர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் Flightradar24.com இணையதளத் தரவுகளின்படி, GMT 7:43 வரை 5,000க்கும் மேற்பட்ட பயனர்கள் "Saudia flight 788" ஐத் தேடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.