கோட்டாபய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்! மாலைத்தீவு சபாநாயகர் தகவல்
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிவிட்டார் என மாலைத்தீவின் முன்னாள் ஜனாத்பதியும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீட் (Mohamed Nasheed) தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிவிட்டார், இலங்கை இனி முன்னோக்கி நகரலாம் என நான் கருதுகின்றேன்.
?? President GR has resigned. I hope Sri Lanka can now move forward. I believe the President would not have resigned if he were still in Sri Lanka, and fearful of losing his life. I commend the thoughtful actions of the Govt of Maldives. My best wishes to the people of Sri Lanka.
— Mohamed Nasheed (@MohamedNasheed) July 14, 2022
இலங்கையில் தொடர்ந்தும் இருந்திருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் காரணமாக ஜனாதிபதி பதவி விலகியிருக்கமாட்டார் என நான் கருதுகின்றேன்.
மாலைத்தீவு அரசாங்கத்தின் புத்திசாலித்தனமான நடவடிக்கையை நான் பாராட்டுகின்றேன், இலங்கை மக்களிற்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
