கோட்டாபயவை சந்திக்கவில்லை: மறுக்கும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தாங்கள் சந்தித்ததாக வெளியான தகவல்களை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவித்து இரண்டு பௌத்த மதகுருமார் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கேட் ஜீரோ அல்லது அரகலயா அல்லது கோட்டா கோ கமவை சேர்ந்த எவரும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என போராட்டக்காரர்களின் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதே தங்களது முக்கிய வேண்டுகோள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை சேர்ந்த ரண்டிமல் கமகே தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டதினை சிதைக்கும் நோக்கத்துடன் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய கொள்கைகளிற்கான தொழில்வல்லுனர்களின் கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.