செய்த பாவங்கள் துரத்துகின்றன; நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய!
இலங்கையில் ஏற்பட்டுள்ல கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், நாட்டை விட்டு தப்பிச்சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் மாலைதீவில் தங்கியிருந்தார்.
கோட்டாவுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாமென மாலைதீவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து அவர் சிங்கப்பூருக்கு பயணித்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலைதீவுக்கு தப்பிச்சென்றிருக்கும் இவர்கள், அங்கிருந்த தனி விமானத்தின் ஊடாக, சிங்கபூர் சென்றடைந்துள்ள நிலையில் அங்கிருந்து சவுதிக்கு செல்லவிருப்பதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.