கோட்டபாயவுக்கு செக் வைத்த அமெரிக்கா
அமெரிக்க குடியுரிமை இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்நாட்டிற்குள் சுற்றுலா பயணியாக கூட அனுமதிக்கப்பட மாட்டார் என முன்னாள் அமெரிக்க தூதுவர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வழக்கு
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு கடுமையான வழக்குகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ராஜபக்ச ஆட்சியை விட ரணில் விக்ரமசிங்க ஆட்சியையே அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசா நிராகரிப்பு
கோட்டாபய ராஜபக்சவின் விசா நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகமே ஊடகங்களுக்கு வெளியிட்டது.
அமெரிக்க அரசாங்கத்துடன் இணங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ச தனது குடியுரிமையை விலக்கிக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.