ஆர்ப்பாட்டத்தை படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் (Photos)
மிரிஹாண பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை படம்பிடித்த 4 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு வியாழக்கிழமை (31-03-2022) நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை படம்பிடித்த குறைந்தது 4 ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதோடு மேலும் மூவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமேதா சஞ்சீவ (தெரன டீவி), நிஷ்ஷங்க வீரப்பிடிய (தெரன), ப்ரதீப் விக்ரமசிங்க (தெரன), அவங்க குமார (சிரச), வருன வன்னியாரச்சி (லங்காதீப), நிசால் படுகே (டெய்லி மிரர்), சதுர தேஷான் (சிரச) என்ற ஊடகவியாளர்களே பொலிஸரால் தாக்கப்பட்டுள்ளனர்.



