தாய்லாந்தில் பணமில்லாது தவிக்கும் கோட்டாபய!
தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கு ஏற்பட்டுள்ள அதிக செலவு காரணமாக கூடிய விரைவில் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இலங்கைக்கான அவரது பயணம் பாதுகாப்புக் காரணங்களால் அவரது இலங்கை பயணம் பின்வாங்கப்பட்டதென குறிப்பிடப்படுகின்றது. “அவர் நிச்சயமாக திரும்பி வர விரும்புகிறார்.
ஆனால் பாதுகாப்பே பிரதான பிரச்சினை, அவர் திரும்பி வருவதை தாமதப்படுத்துமாறு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது” என இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
அவரது பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டால், அவர் இரண்டு வாரங்களில் அல்லது அதற்கு முன்னதாகவே நாடு திரும்ப வாய்ப்புகள் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான மில்லியன் செலவு
அதேவேளை தாய்லாந்தில் கோட்டாபய தங்கியிருப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதும் அவர் நாடு திரும்புவதற்கு ஒரு காரணியாக உள்ளதென கூறப்படுகின்றது.
அங்கு அதேசமயம் அவரது செலவு பட்டியல் தற்போது நூற்றுக்கணக்கான மில்லியன்களை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்குள் தனியார் ஜெட், ஜனாதிபதிகளின் அறை, எந்த நேரத்திலும் பாதுகாப்பு என அனைத்திற்கும் அதிக செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொரு தகவலுக்கமைய, இந்த செலவுகள் பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் சிலரால் ஏற்கப்படுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.