இலங்கையில் பலவீனமடையும் கோட்டாவின் புலனாய்வுத்துறை!
இலங்கையின் வெளிவிவகார துறை வெறுமனே இராணுவமயப்படுத்தப்பட்டதாக இல்லாமல் வெளிநாட்டு அமைச்சின் கீழ் அரசியல் ரீதியிலான புலனாய்வு தகவல்களை மையப்படுத்தியதாக காணப்பட வேண்டும். இவை இலங்கையில் சரியான முறையில் கட்டமைப்பில் செயற்படாமையினால் கோட்டாபயவின் புலனாய்வுத்துறை தற்போது பலவீனமடைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இதன் பின்னணியில் ஜே.வி.பி தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும்,ஜே.வி.பியின் செயற்பாட்டு வடிவங்களை உற்று நோக்கினால் கணிசமாக நோக்கில் ஜே.வி.பி தீவிரமாக பின்புலத்தில் செற்பட்டு வருவதாகவும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
அத்துடன் வெறுமனே மக்களால் மாத்திரம் பல பகுதிகளில் இவ்வாறு போராட்டத்தினை ஏற்பாடு செய்து ஜனாதிபதிக்கு நெருக்கடியினை கொடுக்க இயலாது எனவும்,சஜித் தரப்பினை விடுத்து ஜே.வி.பியின் பலம் தீவிரமடைந்துள்ளதாகவும் நேரு குணரட்னம் மேலும் கூறினார்.