நிறுவன கொள்கைகளை மீறிய மூத்த ஊழியரை தூக்கியெறிந்த கூகுள்!
கூகளின் செயற்கை நுண்ணறிவு உரையாடல் இயந்திரமான LaMDA-க்கு உணர்வுகளை அறியும் ஆற்றல் உண்டு என கூறிய கூகுளின் மூத்த மென்பொருள் பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழியர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதாகவும், அவரது கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் கூகள் கூறியுள்ளது. அத்துடன் "அதுகுறித்து அவ்வளவு சொன்னபிறகும் அவர் தகவல் பாதுகாப்புக் கொள்கைகளைத் தொடர்ந்து மீற முடிவெடுத்தார்," நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
அதேவேளை நிறுவனத்தின் பொருள் தரவுகளைப் பாதுகாப்பதும் கொள்கைகளில் ஒன்று என்று அவர் சுட்டினார். LaMDA எனும் இயந்திரம் மனிதர்களின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
அதற்கு எதைப் பற்றியும் பேசக்கூடிய ஆற்றல் உண்டு.
இதன் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் பலர் ஊழியரின் கூற்றை உடனடியாக நிராகரித்தனர்.