கூகுளில் புதிதாக திருமணமான பெண்கள் தேடுவது இதை தானா! புதுசா இருக்கே: அதிர்ச்சியில் கணவர்கள்
கூகுள் நிறைய உண்மையான தகவல்களை கூறிவருவதால் இந்த தேடுபொறியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் மனங்களை எவ்வாறு கவர கூகுள் உதவியை நாடியுள்ளார்களாம்.
என்ன குழப்பமாக இருக்கிறதா? புதிதாக திருமண பெண்கள் தங்கள் கணவரை கவருவது எப்படி என்பது குறித்து அறிய விரும்புகிறார்கள். கவருவது என்றால் அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதுதான்.
இதை கணவரின் தாய், தந்தை, உடன்பிறந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று பணி நிமித்தமாகவும் பிரைவசியை தேடியும் கணவன், மனைவி மட்டும் தனிக்குடித்தனம் இருக்கிறார்கள்.
மனைவிகள்
இதனால்தான் மனைவிகள் கூகுளை நாடுகிறார்கள். கணவரை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி என ஒரு பெண் தேடியுள்ளார். இது கூட பரவாயில்லை, குழந்தை பெற்றுக் கொள்ள சரியான நேரம் எது என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்களாம்.
குடும்ப பொறுப்பு
திருமணம் முடிந்த பிறகு கணவர் வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்வது, கணவர் வீட்டில் தானும் ஒரு அங்கமாவது எப்படி, குடும்ப பொறுப்பை சுமப்பது எப்படி, திருமணத்திற்கு பிறகு நிறுவனத்தை எப்படி முன்னேக்கி கொண்டு செல்வது என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்களாம். மேலும் கணவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் தேடியுள்ளனராம்.
ஆய்வுகள்
இந்த தகவல்கள் கூகுள் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இந்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக திருமணமான கணவர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி அடுத்த 10 ஆண்டுகளில் திருமணம் செய்யும் பெண்கள் இதற்கென தனியாக கல்லூரியில் பட பிரிவை உருவாக்க கோருவார்களோ! பொதுவாக மனைவி தங்களை எப்போதும் நிம்மதியாகவே இருக்க விடமாட்டார் என கணவன்மார்கள் புகார் கூறுவது உண்டு. ஆனால் இது பட்டியலில் இல்லாததால் கணவன்மார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.