பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவு தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்
போக்குவரத்து பிரிவுகளில் பணிபுரியும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இலங்கை பொலிஸ் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை 01.02.2025 முதல் 25 சதவீதம் அதிகரிக்குமாறு, பதில் ஐஜிபி, மூத்த டிஐஜிக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஓஐசிகளுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றறிக்கை மூலம் தகவல்
அதேவேளை களப் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவுகளின் OIC-கள், களப் பணிகளில் ஈடுபடும் இன்ஸ்பெக்டர்-தர அதிகாரிகள், பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் களப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.
மேலும் இந்த கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்குமாறு பதில் ஐஜிபி அறிவுறுத்தியுளதாகவும் கூறப்படுகின்றது.