ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) மே தின பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த வெளியிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால பிரச்சினையை அரசாங்கம் தீர்த்துள்ளதாக தெரிவித்த அவர், ஓய்வூதியதாரர்கள் தொடர்பான இன்னும் பல பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு நவம்பரில் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அநுர அரசாங்கத்தின் முதலாவது மே தின பேரணி கொழும்பு காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.