யாழ்ப்பாணம் - காரைநகர் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!
யாழ்ப்பாணம் - காரைநகர் இடையில் கடந்த சில வருடங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 785/1 வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந்து சேவை நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றைய தினம் புதன்கிழமை முதல் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.
பயணிகள் மகிழ்ச்சி
காரைநகரில் இருந்து காலை 10. 30 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்து , காரைநகரில் இருந்து மூளாய் பிள்ளையார் கோவிலடி சென்று அங்கிருந்து டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி - யாழ்ப்பாணம் வீதியை வந்தடைந்து, வட்டுக்கோட்டை சந்தி சென்று, அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சென்றடையும்.
மீண்டும் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மதியம் 1.20 மணியளவில் புறப்பட்டு வந்த வழித்தடம் ஊடாக காரைநகரை சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை பேருந்து பயணிக்கும் டச்சு வீதி கடந்த காலங்களில் மிக மோசமாக சேதமடைந்திருந்த நிலையில் தற்போது வீதி புனரமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - காரைநகர் பேருந்து சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.