விவசாயிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!
யூரியா உரத்தினை ஏற்றிய மற்றுமொரு கப்பல் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022/23 பெரும் போகத்தில் மக்காச்சோள செய்கைக்கு தேவையான யூரியா உர இருப்புகளை கொள்வனவு செய்வதற்கு 105 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
கடனூடாக கொள்வனவு
அதன்படி, கடனூடாக கொள்வனவு செய்யப்பட்ட 22,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. அதேவேளை கடன் மூலம், 13,000 மெட்ரிக் டன் உரம் முன்பு வந்தது.
முதல் சரக்கு சீனாவில் இருந்து வந்தது, இரண்டாவது கப்பல் மலேசியாவில் இருந்து வரும். இந்த பருவத்திற்காக 120,000MT யூரியா உரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இவை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 566 நிலையங்கள் ஊடாக உர இருப்புக்கள் விநியோகிக்கப்படுகின்றன