அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் அமைச்சு ஏற்பாட்டில் குறித்த திட்டம் தொடர்பான நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் காணப்படும் தவறான கொள்கைகளினால் இன்று பலர் நிவாரணங்களை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஒரு நாடு வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தால், நிவாரணங்களை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் மக்கள் தாங்கள் பிறந்த தாய்நாட்டில் தனித்து நிற்க விரும்புவார்கள் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இவ்வாறனதொரு பின்னணியில், 2025 இல் 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.