சர்வதேச பொருளாதார பதற்றங்களில் தங்கத்தின் வர்த்தகம் உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், தங்கத்தின் மீதான ஆர்வம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி ஒரு அவுன்ஸ் தங்கம் 5,600 டொலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டு, தற்போது 5,000 டொலர் அளவில் வர்த்தகமாகி வருகின்றது.
தங்கத்தின் மதிப்பைத் துல்லியமாக அறிய அதன் எடை மற்றும் தூய்மை ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தங்கம் மற்றும் ஏனைய விலையுயர்ந்த உலோகங்கள் 'ட்ராய் அவுன்ஸ்' (Troy Ounces - oz t) என்ற அலகால் அளவிடப்படுகின்றன.

1 ட்ராய் அவுன்ஸ் = 31.1035 கிராம். சாதாரண அவுன்ஸ் (28.35 கிராம்) என்பது உணவுப் பொருட்கள் போன்ற அன்றாட பொருட்களை அளக்கப் பயன்படுவது. இது தங்கத்தை அளக்கும் அலகிலிருந்து மாறுபட்டது.
தற்போது 1 கிராம் தங்கம் சுமார் 160 டொலர் பெறுமதி கொண்டது. ஒரு தரப்படுத்தப்பட்ட 400அவுன்ஸ் தங்கக் கட்டியின் விலை சுமார் 2 மில்லியன் டொலராகும்.
தங்கத்தின் தூய்மை 'கரட்' (K/ct) மூலம் அளவிடப்படுகிறது. 24 கரட் என்பது 99.9% தூய்மையான தங்கம். 24 கரட் (99.9%): ஆழ்ந்த செம்மஞ்சள் நிறம், மிகவும் மென்மையானது. முதலீட்டு நாணயங்கள் மற்றும் கட்டிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
22 கரட் (91.6%): நீடித்த உழைப்பு கொண்டது. ஆடம்பர நகைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. (முத்திரை: 916) 18 கரட் (75%): செம்பு அல்லது துத்தநாகம் கலக்கப்பட்டது.
நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்குப் பொருத்தமானது. (முத்திரை: 750) 9 கரட் (37.5%): குறைந்த விலை நகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு தங்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது.
1834 - 1933: ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 20 டொலராகவே நீடித்தது. 1933: பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஒரு அவுன்ஸ் விலை 35 டொலராக உயர்த்தப்பட்டது.
1971: அமெரிக்க டொலருக்கும் தங்கத்திற்குமான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
2016 - 2026: கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 1,250 டொலரிலிருந்து தற்போது 5,000 டொலர் வரை, அதாவது 4 மடங்கு அதிகரித்துள்ளது.