கணவனுடன் மருத்துவமனை சென்ற பெண்ணிடம் மருத்துவரின் மோசமான செயல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவராக நடித்து, நோயாளி ஒருவரின் மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடியாகப் பறித்த சம்பவம் ஒன்று பதிகாவியுள்ளது.
இந்நிலையில் மோசடி நபரை எதிர்வரும் 10ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மாளிகாகந்த பதில் நீதவான் ஷமிலா சஹப்தீன் உத்தரவிட்டார்.
வைத்தியசாலையின் அலட்சியம்
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த பூனம் கிறிஸ்டோம்பகே சஷிக மதுஷங்க என்ற சந்தேக நபர் இந்த மோசடி செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி ,
மனுதாரரின் கணவர் உடல்நலக் குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தில், தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தேக நபர், நோயாளி மற்றும் அவரது மனைவியை அணுகியுள்ளார்.
சந்தேக நபர், மனுதாரரின் இரத்த மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறி அவரை வைத்தியசாலை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது தங்க நகைகளை கழற்றி வைக்கச் சொன்னார்.
அந்த நகைகளை தனது கணவரிடம் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றை எடுத்துச் சென்றுள்ளார். பொலிஸ் அறிக்கையின்படி, சந்தேக நபர் இந்த மோசடி செயலை வைத்தியசாலைக்குள் மருத்துவர் வேடமணிந்து செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மனுதாரர் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை இழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விரிவான விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பதில் நீதவான் அவரை எதிர்வரும் 10ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இடம்பெறும் இவ்வாறான மோசடிச் செயல்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன
மேலும் நோயாளிகளை அனுமதிக்கும் போது ஏதாவது ஒரு அதிகாரி பொறுப்புடன் செயல்பட்டால், இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.