ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த நாட்களை இன்று விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று மாலை ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,432 ஆக இருந்த நிலையில் இன்று 528 ரூபாய் உயர்ந்து ரூ.36960-க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்து மூகூர்த்த நாட்கள் வரும் சமயத்தில் தங்கம் விலை உயர்வு மக்களை கவலையடைய செய்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்தும், ஒரு பவுனுக்கு 528 உயர்ந்தும் விற்பனையாகிறது.
அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 4620 ரூபாய்க்கும், ஒரு சவரன் விலை ரூ.36960-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39872-க்கு விற்பனையாகிறது.
நேற்று மாலை ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,432 ஆக இருந்த நிலையில் இன்று 528 ரூபாய் உயர்ந்து ரூ.36960-க்கு விற்பனையாகிறது.
அதேவேளை வெள்ளியின் விலை 1.30 பைசா குறைந்து ரூ 70.60-க்கு விற்பனையாகிறது. அதோடு 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,600 ஆக உள்ளது.