ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை! பெரும் கவலையில் இல்லத்தரசிகள்
பொதுவாகவே தற்காலத்தில் தங்கம் இன்றி எந்த விழாவும் நடைபெறுவதில்லை. அதிலும் திருமணத்தின் போது, பெண் வீட்டார் தங்களது மகளுக்கு ஒரு குண்டுமணி் அளவாவது தங்கத்தை போட்டு அழகு பார்ப்பது வாடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகிப் போன தங்கத்தின் விலை தாறுமாறாக எகிறி வருவதால் திருமணத்தை எதிர் நோக்கியுள்ள பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து, ரூ.4,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
அதோடு ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.69.90-க்கு விற்பனை செய்யப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.