தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு
இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்றையதினம் (17) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில், இன்று ( 18 ) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,970க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.52,440க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,555க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
அதேவேளை வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.