மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை; கவலையில் நகைப்பிரியர்கள்!
இந்தியாவில் கடந்த நாட்களில் தங்கத்தின் விலை சற்று சரித்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையானது உயர்வடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை
அந்தவகையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,760-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,718-க்கும் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ. 37,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.77க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.