வார இறுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை!
தங்கத்தின் இலையானது நாளுக்கு நாள் உயர்வடைந்து சென்ற நிலையில் வார இறுதி நாளான் இன்று சற்று சரிவை கண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே உள்ள நிலையில் சென்னையில் நேற்று 55 ஆயிரத்து தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையானது சென்னையில் குறைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,355 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,840 எனவும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய தங்க விலை நிலவரம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 6,885 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 55,080 என விற்பனையாகி வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
வெள்ளியின் விலை
சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.