உலகில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு; நகைப்பிரியர்கள் க்ஷாக்!
உலகில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளமையால் நகைப்பிரியர்களும், தங்க முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதித்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டது.
மீண்டும் இந்த வரிகளை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதால், பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் சிலர் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கம் விலையும் கூடி வருகிறது.
தங்கத்தின் தேவை அதிகரிப்பு
இந்நிலையில் நேற்று (11) தங்கம் விலை கிராமுக்கு 185 ரூபா உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 8,745 ரூபாவுக்கும், சவரனுக்கு 1,480 ரூபாவுக்கும் உயர்ந்து, ஒரு சவரன் 69,960 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (12) தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 8,770 ரூபாவுக்கும், சவரனுக்கு 200 ரூபா உயர்ந்து, ஒரு சவரன் 70,160 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு 20 ரூபா உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7,265 ரூபாவுக்கும் ஒரு சவரன் தங்கம் 160 ரூபா உயர்ந்து, 58,120 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளி 1,10,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.