இலங்கையில் தங்கம் விலை பாரிய வீழ்ச்சி; உற்சாகத்தில் இல்லத்தரசிகள்!
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
அதன்படி இன்று (30) அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.

பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் பவுணுக்கு (இந்திய மதிப்பில்) ரூ. 4,800 குறைந்து, ஒரு பவுண் ரூ. 129,600 க்கும், ஒரு கிராம் ரூ. 16,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.