கொழும்பில் உச்சம் தொட்ட தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (09) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000 ரூபாயால் அதிகரித்து 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (09) தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.