புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இல்லத்தரசிகள் க்ஷாக்!
சென்னையில் இன்று (21) ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்து , சவரனுக்கு ரூ.72 ஆயிரமாக புதிய உச்சம் தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த 9 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி 9 ஆம் திகதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வரலாறு காணாத புதிய உச்சம்
அதன்பிறகு, 10 ஆம் திகதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது.
சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கும், கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் இன்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதாவது, கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை, சவரனுக்கு ரூ.72 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் மற்றும் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.