மாத தொடக்கத்திலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!
நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று மீண்டும் குறைந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,686க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 232 குறைந்து ரூ.45,488க்கு விற்பனையாகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 23 குறைந்து ஒரு கிராம் ரூ.4,658ஆகவும், சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.37,264 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.77.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,00 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.