ஆரம்பமே அட்டகாசம் தான்; மாத முதல் நாளில் அதிரடியாக சரிந்த தங்கவிலை!
மாதத்தில் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சரிந்துள்ளது.
அமெரிக்க வங்கிகள் திவால், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 25 உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக விலை சரிந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,560 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 4,554 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை குறைந்து ரூ.36,432 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையும் ரூ.77.50 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,500 எனவும் விற்பனையாகிறது.