அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் தங்கம் விலை வீழ்ச்சி !
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ள நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் , தங்கத்தின் விலை 0.8 விழுக்காடு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) , பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் (Keir Starmer) இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய உடன்பாட்டை அறிவித்தனர்.
வர்த்தகப் பேச்சில் முன்னேற்றம் - தங்கம் விலை வீழ்ச்சி
பிரிட்டனிலிருந்து தருவிக்கப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து 10 விழுக்காடு வரி விதிக்கிறது. அமெரிக்கப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 5.1 விழுக்காட்டிலிருந்து 1.8 விழுக்காட்டுக்குக் குறைக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் பொருள்களை வாங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கவும் அது இணங்கியிருக்கிறது.
இந்நிலையில் இரு நாடுகளின் வர்த்தகப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கம் விலை குறைந்திருப்பதாக நிதிச் சந்தைக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் வாரயிறுதியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.