தங்கம் விலை திடீர் சரிவு; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
சென்னையில் தங்கம் விலையில் இன்று (15 ) திடீர் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் நகைப்பிரியர்கள் மைழ்ச்சி அடைந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது.
சென்னையில் நேற்று (14 ) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில், இன்று (15 ) தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,890-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,495-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.51,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.