தொடர் ஏற்றத்தின் பின் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
சென்னையில் இன்று (பிப். 3ஆம் திகதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,705க்கும் ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ. 61,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் 2025 ஆம் ஆண்டு பிறந்த்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் திகதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தாண்டியது.
தொடந்து எகிறிய தங்கம் விலை
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தாண்டியது.
இந்திய நாடாளுமன்றத்தில் 2025 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளான பிப்ரவரி முதல் திகதியில் இரண்டு முறை தங்கம் விலை அதிகரித்தது. அதாவது காலையில் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,745க்கும் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ. 61,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
2025 பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7790 ஆக விற்கப்படுதுகிறது. ஒரு சவரன் விலை ரூ.360 உயர்ந்து ரூ.62,320 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் இன்று (பிப். 3ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,705க்கும் ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ. 61,640க்கும் விற்பனையான நிலையில் இன்று தங்கத்திலை குறைந்துள்ளமை நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,365க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.50,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.