மாத முதல் நாளே மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை
i செப்டம்பர் மாத முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,280 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் 4,534 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.36,272 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.