ஒரேநாளில் எகிறிய தங்கம் விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தங்கம் விலையனது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரேஎநாளில் தங்கம் விலை உரந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று நவம்பர் 28ஆம் திகதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று வரலாறு காணாத அளவு அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 94 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,808க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.82,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.