தொடர் சரிவில் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி!
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகின்றமை நகை வாங்க காத்திருந்தோருக்கு பெரும் அம்கிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,285 ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.4,329 ஆகவும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.34,632 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேசமயம் தங்கம் விலை குறைந்தபோதும் கடந்த நாட்களில் வெள்ளி விலை குறையாத நிலையில் இன்று வெள்லி விலையும் கிராமுக்கு அதிரடியாக 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.