வாரத்தின் முதல் நாளே க்ஷாக் கொடுத்த தங்கம் விலை!
உலகில் தங்கம் விலையானது கடந்த பல மாதங்களாக ஏறுமுகத்தில் இருப்பது மக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
அந்தவகையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ஆம் திகதி) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,040-க்கும், ஒரு சவரன் ரூ.64,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று (மார்ச் 10-ஆம் திகதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,050-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,620-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.52,960-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.