தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி ; நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 384,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், உள்ளூர் தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.