கொரோனாவால் சாவின் விளிம்புவரை சென்று.... இன்று மிஸஸ் இந்தியா 2021 ; மெய்சிலிர்க்க வைத்த பெண்மணி!
கொரோனா காரணமாக சாவின் விளிம்பை தொட்டு பார்த்து மீண்டு வந்தவர், இன்று திருமதி உலக அழகிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள நிலையில் , தன்னம்பிக்கை நிறைந்த சாதனை பெண்மணியை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
மனநல நிபுணர், தொழில்முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர்.பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் “தி இண்டர்நேசனல் கிளாமர் பிராஜக்ட்” நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்று ‘மிஸஸ் இந்தியா 2021’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

பெண்கள் அதிகாரமளிப்பதற்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க – இந்திய கூட்டு முயற்சியில் மிஸ் இண்டர்நேஷனல் வோர்ல்ட் இந்தியா கிளாசிக் அழகிப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியானது பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இதன் இறுதிப் போட்டி மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.
இதில் சென்னையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி இந்த போட்டிக்கே புதியவர். அதோடு அவர் மாடலிங் துறையில் அனுபவமற்றவர்.

ஆனால் இவருடன் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்கள் மாடலிங் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள். இருப்பினும் புதியவரான நளினி அனைத்து கட்டங்களிலும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் 47 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, அதில் 2021ம் ஆண்டுக்கான மிஸ் இண்டர்நேஷனல் வோர்ட்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
அதேவேளை இதே போட்டியில் Glamourous acheiver என்ற துணைப் பிரிவிலும் கூடுதலாக ஒரு பட்டத்தையும் வென்றிருக்கிறார் நளினி. இந்நிலையில் சாதனை படைத்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
