கோட்டாபய குறித்து ஞானக்கா வெளியிட்ட தகவல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ (Gotabaya Rajaapaksa) உடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டதாக அனுராதபுரத்தை சேர்ந்த ஞானக்கா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
செல்வதற்கு இடமில்லாது இந்த சந்தர்ப்பத்தில் அவர் பாதுகாப்பு கோரினால், வீட்டுக்கு அழைக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பத்திற்கும் எனது கோயிலுக்கும் இடையிலான தொடர்பு 13 வருடத்திற்கு மேற்பட்டது.
ஜனாதிபதியாக தெரிவாகும் முன்னர் அவர் அடிக்கடி கோயிலுக்கு வந்து சென்ற போதிலும் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் அவர் என்னை சந்திக்க கோயிலுக்கு வரவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ எனது கோயிலுக்கு வந்தது அரசியல் முடிவுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக அல்ல.
சுகவீனம் காரணமாக நேர்த்தி கடனுக்காக வந்தார். அரசியல்வாதிகளுக்கு கோயிலில் சேவைகளை வழங்கியமை குறித்து தற்போது வருத்தப்படுகிறேன்.
கோயிலும் ஹோட்டலும் தீயில் அழிய இவை காரணமாக அமைந்தன. இப்படியான பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தற்போது எவ்வித தொடர்புகளும் இல்லை.
ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக சமூகத்தில் என்னை பற்றி தவறான விம்பம் ஏற்பட்டுள்ளது எனவும் ஞானக்கா கூறியுள்ளார்.