உலக சந்தை மாற்றம் ; இலங்கையில் தங்க விலை கடும் உயர்வு
உலக சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு அமைய, இலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு சுமார் 20,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரணங்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதன்படி தங்கத்தின் தரம் மற்றும் ஆபரண வகைகளுக்கு ஏற்ப விலைகள் பின்வருமாறு மாற்றமடைந்துள்ளன.

24 கரட் தங்கம்: ஒரு பவுன் 354,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கம்: ஒரு பவுன் 327,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மூளும் என்ற அச்சம் உலக சந்தையில் எழுந்துள்ளது.
இவ்வாறான போர்ச் சூழலில் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் தங்கத்தைச் சேமிக்கத் தொடங்கியுள்ளமையே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.