உலக தங்க சந்தையில் அதிர்வு ; 7 ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சி
துருக்கியின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டு நாணயமான 'லிரா'வின் (Lira) மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, துருக்கி மத்திய வங்கி தனது தங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம் ; சிறுமியை விகாரை வளாகத்தில் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய பிக்கு கைது
கடந்த மார்ச் 13 மற்றும் மார்ச் 20 ஆகிய வாரங்களுடன் முடிவடைந்த இரு வார காலப்பகுதியில் மட்டும் சுமார் 58 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பால் துருக்கியின் லிரா நாணயம் கடும் அழுத்தத்தை சந்தித்துள்ளது.

டொலருக்கான தட்டுப்பாட்டைப் போக்கவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்செய்யவும் இந்த தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட தங்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவை 'சுவாப்' (Swap) ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க டொலரைக் கடனாகப் பெறப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ளவை நேரடியாகச் சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி விற்பனையால் துருக்கியின் தங்கக் கையிருப்பு சுமார் 513 டன்களாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.
அதேபோல், அந்நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 40 பில்லியன் டொலர்கள் குறைந்து, 175 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். துருக்கியின் இந்த பாரிய தங்கம் விற்பனை உலகளாவிய தங்கச் சந்தையிலும் (Bullion Market) கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தங்கத்தின் விலை சுமார் 2.4% முதல் 3.1% வரை சரிவைச் சந்தித்தது. சர்வதேச அளவில் தங்க முதலீட்டு நிதியங்கள் (Gold-backed ETFs) வெளியேற்றிய 43 டன் தங்கத்தை விட, துருக்கி தனிநாடாக விற்பனை செய்த அளவு அதிகமாகும்.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாணய மதிப்பை நிலைநிறுத்தவும் துருக்கி எடுத்துள்ள இந்த முயற்சி, உலகப் பொருளாதார ஆய்வாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.