காதலுக்கு எதிர்ப்பு; பர்தாவை அணிந்து யுவதியை கடத்தி வன்புணர்வு
பிபில பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவியை பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு சென்ற இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றார்.
பிபில பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்விப்பயிலும் கணுல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியை, அவருடைய சட்டரீதியான பொறுப்பானவர்களிடமிருந்து கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காதலுக்கு எதிர்ப்பு
பாதிக்கப்பட்ட யுவதி, 2024 மே மாதம் முதல் இளைஞனுடன் காதல் உறவில் இருந்த நிலையில் யுவதியின் தாய் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்கு சென்ற இளைஞன், மஹியங்கனையில் கிராமத்துக்கு யுவதியை கடத்திச் சென்றுள்ளார்.
யுவதியை கடத்திச் செல்லும் போது அந்த யுவதிக்கு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து தான் கொழும்புக்கு வேலைக்குச் செல்வதாக கூறி யுவதிக்கு புர்கா அணிந்து, மஹியங்கனை நகருக்கு மார்ச் 05 ஆம் திகதியன்று அழைத்துவந்து, ஆட்டோவில் ஏற்றி, அந்த யுவதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவத்தை தாயிடம் விபரித்த யுவதி, தாயுடன் சென்று பொலிஸில் முறையிட்டுள்ளார். எனினும், தன்னை தடுத்து வைத்திருந்த வீடு ஞாபகத்தில் இல்லை என்றும் யுவதி தெரிவித்துள்ளார்.
யுவதியின் முறைபாட்டை ஏற்றுக்கொண்ட பிபில பொலிஸார், சந்தேகநபரான அந்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.