காதலனின் பாட்டியை காண சென்ற யுவதிக்கு நேர்ந்த துயரம்
களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென இடிந்து விழுந்த சுவர்
சம்பவத்தில் வாத்துவ மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிரசாதினி பிரியங்கிகா, நேற்று மதியம் தனது காதலனின் பாட்டியிடம் நலன் விசாரிப்பதற்காக களுத்துறை பனாபிட்டியவில் உள்ள தனது காதலரின் பாட்டியின் வீட்டிற்குச் நேற்று மாலை தனது காதலனுடன் சென்றிருந்தார்.
காதலன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவினை வழங்குவதற்காக வீட்டின் பின்னால் சென்றிருந்த வேளை, அந்த நேரத்தில் பிரியங்காவும் வீட்டின் பின்னால் உள்ள சுவர் அருகே நின்று கொண்டிருந்தார்.
இதன்போது, திடீரென சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த போது, பிரியங்கா அதில் சிக்கிக்கொண்ட நிலையில், உடனடியாக பிரியங்காவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் உயிரிழந்ததார்.