13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; 60 வயது தாத்தா உட்பட 5 பேர் கைது
13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இரண்டு வருடங்களாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் , தனியார் பஸ் நடத்துனர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், ஹொரணை ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர், களுத்துறை, தியகம பிரதேசத்தில் வசிக்கும் மூவர் மற்றும் அவரை வீடொன்றில் தங்கவைக்க ஊக்குவித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வறுமையை பயன்படுத்தி துஸ்பிரயோகம்
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்ட தாத்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது நோயுற்ற பெற்றோர் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வருவதாகபொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் , வீட்டின் வறுமை காரணமாக பணம் மற்றும் பிற பொருட்களை வழங்கி ஏமாற்றி இரண்டு வருடங்களாக சிறுமி கூட்டு பலாத்காரம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.