பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி
பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமி ஒருவர் வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்து கொண்ட இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டின் கதவை மூடியுள்ளார். எனினும் அந்த இளைஞன் யன்னல் ஊடாக சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கதவு மீது கல்லெறிந்து தொந்தரவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளைப் பெற்று தேக ஆரோக்கியம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடும் பணிகளில் அந்நாட்டுக் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு சந்தர்ப்பமாக இருந்தாலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவு தவறானதாகும்