இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல்

Sri Lanka Police Galle Sri Lanka Germany
By Sahana Oct 15, 2026 11:05 PM GMT
Report

காலி, ரத்கம பகுதியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரைத் தாக்கியதாக 29 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெஞ்செரிச்சல் என நினைத்து மருத்துவமனை சென்ற பெண் ; உணவுக்குழாயில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணிப் புழு

நெஞ்செரிச்சல் என நினைத்து மருத்துவமனை சென்ற பெண் ; உணவுக்குழாயில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணிப் புழு

பொலிஸார் விசாரணை

காதல் உறவின் அடிப்படையில் மீன்பிடிப் படகு வாங்குவதற்காக வழங்கிய 25,000 யூரோக்களைத் திருப்பிக் கேட்டபோது, குறித்த பெண் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, காலி, பூசா, பிட்டிவெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞருக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணுக்கும் இடையில் காதல் உறவு ஏற்பட்டுள்ளது.

இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் | German Woman Deceived By Her Sri Lankan Lover

இதன் அடிப்படையில், தனது காதலனின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப் படகு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு அந்தப் பெண் 25,000 யூரோக்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

குறித்த பெண் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தபோது, பூசா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையை முன்பதிவு செய்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பணம் தொடர்பாக இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும், முன்னர் வழங்கிய பணத்தைத் திருப்பித் தருமாறு பெண் கோரியபோது, இளைஞர் அவரைத் தாக்கியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பெண் உதவி கோருவதற்குப் பயன்படுத்த முயன்ற கைப்பேசியும் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ரத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தான் வழங்கிய பணத்தை மீட்டுத் தருவதுடன், தனக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், 29 வயதுடைய இலங்கை இளைஞரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மருத்துவர் உயிரிழப்பு வழக்கு ; மகளின் பிணை மனு ஒத்திவைப்பு

யாழ். மருத்துவர் உயிரிழப்பு வழக்கு ; மகளின் பிணை மனு ஒத்திவைப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US