பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆலயத்தில் அற்புதம்; பார்க்க குவியும் மக்கள்!
கண்டி மாவட்டம், கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வண்ணக் கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை
இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிர்ந்ததை கவனித்த இத்தோட்ட மக்கள் அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு ரத்தினக் கல்லா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த செய்தி கலஹா பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்ற பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் இதனை “ஆலயத்தில் அதிசயமான நிகழ்வு” என ஆர்வமாக பார்வையிடட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பெறுமதியான இரத்தினக்கல்லாக இருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.