மாணிக்கக்கல் திருட்டு ; பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரத்தினபுரி பிரிவின் குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாணிக்கக்கல் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டு அதனை விசாரணை நடவடிக்கைகளுக்காக பாவித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) ஆஜர்படுத்தப்பட்டபோதே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொறுப்பதிகாரி தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முறைப்பாட்டாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.