சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை நாளை (30.4.2024) நள்ளிரவுடன் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations Sri Lanka) வெளியிட்ட அறிவித்தலில் மேலும் குறிப்பிடுகையில்,
கடுமையான நடவடிக்கை
ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை (2024) பரீட்சைக்குத் தயார்படுத்தும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை நாளை 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் மே 15 வரை நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் (Department of Examinations Sri Lanka) குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |