GCE O/L பெறுபேறு ; யாழ். வடமராட்சி உடுத்துறை மகா வித்தியாலயம் சாதனை
2024 கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய பாடசாலையான உடுத்துறை மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் 9A சித்திகளை பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளன.
நான்கு பேர் 9A சித்தி
அந்தவகையில், உடுத்துறை மகாவித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
Y.ரம்சிகா, S.கவிநிலா, U.கவியரசி மற்றும் T.குபேசன் ஆகிய நான்கு மாணவர்களே 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை V.இசைவானி மற்றும் A.சங்கவி ஆகிய மாணவர்கள் 8ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ் வரலாற்று சாதனை தொடர்பாக பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த முறை மிகச் சிறந்த பெறுபேறுகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். அதோடு எதிர்வரும் காலத்தில் 100% சித்தியினை பாடசாலை அடைவதற்கு தாம் அனைவரும் பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.
