தொடருந்து இயந்திர இயக்குநர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
இன்று (17) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு
ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்தனர்.
எனினும் அவ்வாறு பயிற்சியில் ஈடுபடவிருந்த 20 இராணுவ அதிகாரிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர்.